News May 18, 2024
குமரிக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை (மே.19) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 9.30 மணி – பூதப்பாண்டி பேரூராட்சி ஈசாந்திமங்கலம் ஊராட்சி, இறச்சகுளம் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதை நிறுத்தியதை கண்டித்து இறச்சகுளம் சந்திப்பில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாலை மணி – வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோட்டாறு பாவா காசிம் திடலில் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
News April 20, 2025
குமரி: கடனை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

சந்தையடி தேரிவிளையைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன். இவர் ஜேசிபி ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஆதிராஜனுக்கு 30 ஆயிரம் ரூபாய் ஹரிஹரசுதன் கடன் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை ஹரிஹரசுதன் கேட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த ஆதிராஜன் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். கன்னியாகுமரி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஆதிராஜனை கைது செய்தனர்.
News April 19, 2025
உயிரிழந்த 22 மாணவ மாணவிகளுக்கு அதிமுக அஞ்சலி

நீட் ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்ததாக திமுக அரசை கண்டித்தும், நீட் தேர்வால் இன்னுயிரை இழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு இன்று மாலை (19.4.2025) நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகில் திமுக மாணவர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.