News March 19, 2025
குமரி மாவட்டத்தில் கள்ளக் கடல் எச்சரிக்கை!

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரையிலான கடலோரப் பகுதிகளில் 12 முதல் 15 வினாடிகளுக்கு ஒருமுறை அலைகள் கரைப்பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளது. இன்று(மார்ச் 19) மாலை 3.30 மணி வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் கடல் சார் ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது. ஆகவே கடற்கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News March 19, 2025
கேரளாவில் இருந்து குமரியில் விடப்பட்ட வெறி நாய்கள்

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட வெறி நாய்களை கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட நெட்டா சோதனை சாவடி வழியாக தமிழ்நாடு எல்லை பகுதியான அரகநாடு கட்டச்சல் பகுதியில் விட்டபோது வாகனத்தை பொதுமக்கள் விரட்டி சென்று சிறைபிடித்தனர். ஒரு சில நாய்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News March 19, 2025
முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அரிய வாய்ப்பு

குமரி மாவட்டத்தில் அஞ்சல் துறை மூலம் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சலக அடையாள அட்டையில் விண்ணப்பதாரரின் பெயர் முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் இந்த அடையாள அட்டையை பெற முடியும். இதற்கான விண்ணப்பத்தினை ரூ.20 செலுத்தி அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று குமரி அஞ்சல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 19, 2025
நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையை இடமாற்ற திட்டம்

நாகர்கோவிலில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்டு கைதாகும் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 40 முதல் 50 பேர் வரை கைதிகளை பார்க்க வரும் நிலையில், இங்கு போதிய இடவசதி இல்லாத நிலையில் உள்ளது. அதனால் புதிய சிறைச்சாலை அமைக்க அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஒரே இடத்தில் 30 ஏக்கர் அளவிற்கு புறம்போக்கு நிலங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.