News November 25, 2024

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10:30க்கு CPIM அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பார்வதிபுரம் பாலம் அருகே கணியான் குளம் இணைப்பு கிராம சாலை குறுக்கே நான்கு வழிச்சாலை அமையும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்ககோரி ஆர்ப்பாட்டம். #காலை 10க்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் மாநகராட்சி பூங்கா முன்பு வன்முறை எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம். #மாலை 5.30க்கு ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Similar News

News August 5, 2025

கன்னியாகுமரி மக்களே… மாதம் ரூ.3000 ஓய்வூதியம் தெரியுமா?

image

குமரி அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம் தான் இந்த “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்” (PM-SYM). இதில் சந்தாதாரர் 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3,000-யை குறைந்தபட்ச ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதி செய்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், ஓட்டுநர்கள் போன்ற பல அமைப்புசாரா தொழிலாளர்கள் <>இதில் பயன்பெறலாம்<<>>. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News August 5, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட். 5) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 41.43 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 68.12 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 76 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.85 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 360 கன அடி, பெருஞ்சாணிக்கு 143 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

News August 5, 2025

குமரியில் மதபோதகர் போக்சோவில் கைது!

image

கன்னியாகுமரி: தக்கலைப் பகுதில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மூலச்சல் பகுதியைச் சார்ந்த வர்கீஸ்(55) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். இவர் கிறிஸ்தவசபையில் வேதாகம வகுப்பிற்கு வந்த 16 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இதுபற்றி சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்போரில், தக்கலை போலீசார் மதபோதகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!