News March 26, 2025
குமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் வசூல் விவரம்

குமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இன்று(மார்ச்.25) அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இணை ஆணையர் பழனிகுமார் உதவி ஆணையாளர் தங்கம் மேலாளர் ஆனந்த் ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. இதில் வருமானமாக ரூ.26லட்சத்து 46ஆயிரத்து 153வசூலானது. இதுதவிர 4.500 கிராம் தங்கமும் 32.950 கிராம் வெள்ளியும் வெளிநாட்டு பணங்களும் வசூல் ஆனது.
Similar News
News April 15, 2025
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவராகிறார் சுரேஷ் ராஜன்

தமிழக முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளருமான என்.சுரேஷ் ராஜன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவராக நியமிக்கப்படுகிறார். இவர் நாளை பதவி பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் சென்னை புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் சென்னை புறப்பட்டுச் சென்றனர்.
News April 14, 2025
குமரியின் அருமையான சுற்றுலா தலம்

முருகப் பெருமானின் மனைவி வள்ளி தேவி நீராடியதன் காரணமாக இந்த இடத்திற்கு வள்ளி சுணை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடம் தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் வேளி மலை குமாரகோயில் உள்ளது. கோயில் நடை காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை திறந்திருக்கும். வள்ளிச்சுனைக்குச் செல்ல விரும்புவோர், தக்க பாதுகாப்புடனும் வழிகாட்டலுடனும் சென்று வரலாம். * நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 14, 2025
குலசேகரத்தில் புத்தகக் கண்காட்சி ஏராளமானோர் பங்கேற்பு

குலசேகரம் கான்வென்ட சந்திப்பு மனுவேல் மண்டப வளாகத்தில் NCBH புத்தக நிலையம் சார்பில் இன்று தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தக கண்காட்சியை அப்பகுதியில் உள்ள ஏராளமானவர்கள் வந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.