News March 27, 2025

குமரி கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 16 முதல் 20 வினாடிகளுக்கு ஒருமுறை 0.8 முதல் 0.9 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்ப வாய்ப்புள்ளது. எனவே இன்று(27ஆம் தேதி)அலைகளின் தாக்கம் காணப்படும் என்பதால் கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய கடல் சார் சேவை மையம் நேற்று தெரிவித்துள்ளது.

Similar News

News August 5, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட். 5) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 41.43 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 68.12 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 76 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.85 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 360 கன அடி, பெருஞ்சாணிக்கு 143 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

News August 5, 2025

குமரியில் மதபோதகர் போக்சோவில் கைது!

image

கன்னியாகுமரி: தக்கலைப் பகுதில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மூலச்சல் பகுதியைச் சார்ந்த வர்கீஸ்(55) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். இவர் கிறிஸ்தவசபையில் வேதாகம வகுப்பிற்கு வந்த 16 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இதுபற்றி சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்போரில், தக்கலை போலீசார் மதபோதகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News August 5, 2025

குமரி ரயில் நிலைய விரிவாக்க பணிகள் தீவிரம்

image

கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரி ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு புதிய மின் நிலையம், பயணிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!