News March 20, 2025
குட்காவை விற்ற 1,236 கடைகளுக்கு ரூ.3.20 கோடி அபராதம் விதிப்பு

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் தடைச் செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 1,236 கடைகளுக்கு ரூபாய் 3.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
Similar News
News March 28, 2025
கல்யாண பாக்கியம் தரும் பேளூர் கோயில்!

சேலம்: பேளூரில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கி.பி.12ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. மூலவர் தான்தோன்றீஸ்வரர் (சிவன்),இறைவி தர்மசம்வர்த்தினி என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் கல்யாண விநாயகருக்கு மாலை,தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து மாலையை விநாயகர் கழுத்தில் போட்டால் கல்யாண பாக்கியம் கைகூடும். மனமுருக வேண்டினால் கல்யாணம், குழந்தை பாக்கியம் கிட்டும்.
News March 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.28 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News March 28, 2025
சேலத்தில் கால்பந்து மைதானம்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

ரூபாய் 25 கோடியில் சர்வதேச தரத்தில் 8 தடங்கள் கொண்ட செயற்கை தடகள ஓடுபாதையுடன் இயற்கை கால்பந்து புல்வெளி மைதானம் சேலம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அமைக்கப்படும். சர்வதேச தரத்தில் நீர்த்தெளிப்பான் வசதி, பாதுகாப்பு வேலி, தடகள மற்றும் கால்பந்து உபகரணங்கள், நீளம் தாண்டுதல் குழி மற்றும் பிற தேவையான வசதிகள் அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!