News March 31, 2025

குடும்பத்தை ஒற்றுமையாக்கும் திருத்தலம்

image

திருவள்ளூர், திருவாலங்காடில் அமைந்துள்ளது வடாரண்யேஸ்வர்ர கோயில். முற்க்காலத்தில் இறைவன் சுயம்வுவாக தோன்றி நடனம் ஆடிய தலம் என்பதால் வடாரண்யேஸ்வரர் என பெயர் பெற்றது. இத்தலம் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. மேலும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையைப் பலப்படுத்தும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. தம்பதிகளுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

Similar News

News April 3, 2025

மர்ம காய்ச்சலால் தொழிலாளி உயிரிழப்பு

image

ஏடூர் கிராமத்தில் மூன்று நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி, 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கூலித்தொழிலாளி சுரேஷ் (46) உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யாததால், கிராமவாசிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காய்ச்சல் பரவி வரும் நிலையில் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

News April 3, 2025

முருங்கை மரத்திலிருந்து விழுந்தவர் பலி

image

அகூர் கிராமத்தை சார்ந்த வெங்கடேசன் (61) இவர் வீட்டின் அருகே உள்ள முருங்கை மரத்தில் கீரை மற்றும் முருங்கைக்காய் அறுக்க மரத்தில் ஏறி உள்ளார். அப்பொழுது கிளை உடைந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 2, 2025

திருவள்ளூரில் நூற்றாண்டு விழா போட்டிகள்

image

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபாடி, கையுந்துப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் 03.04.2025 முதல் 05.04.2025 வரை நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு 7401703482, 8072908634 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!