News March 26, 2025
குடும்ப ஐஸ்வர்யம் பெற அற்புத கோவில்

தி.மலை மாவட்டம் நெடுங்குன்றம் பகுதியில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர் கோவில் உள்ளது. இத்தலத்தில் ராமர் அமர்ந்த நிலையில் இருப்பது சிறப்பு. இங்கு வந்து வழிபட்டால் திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், தொழில் வளர்ச்சி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றிற்காகவும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 6, 2025
தி.மலை: ரோந்து பணி காவலர்கள் குறித்து விவரம்

காவல்: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 06) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News August 6, 2025
தி.மலை: தாசில்தார் மீது புகார் அளிப்பது எப்படி?

திருவண்ணாமலை மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் தி.மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04175-232619) புகாரளிக்கலாம். *இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்*
News August 6, 2025
தி.மலையில் பேராசிரியர்கள் போரட்டம்

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றிட கூறி தமிழக அரசினை வலியுறுத்தி இன்று (ஆகஸ்ட்.06) கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் அரசு கலைக் கல்லூரி நுழைவாயில் முன்பு கோஷமிட்டு முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என்று கூறினார்கள்.