News March 17, 2025

கிருஷ்ணகிரி: விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தகவல்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறுவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து, நிவர்த்தி செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.

Similar News

News March 18, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News March 18, 2025

திடீர் வலிப்பு ஏற்பட்டு இளைஞர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துார் அடுத்து செவ்வத்துார் ஊராட்சி மைக்கா மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சி(35) கூலி தொழிலாளி. இவர் நத்தகாயம் கிராமத்தில் தங்கி வேலை செய்து வந்தார். வேலை முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய போது நிலைதடுமாறி கீழே விழுந்தவருக்கு வலிப்பு ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மத்துார் போலீசார் ஆஞ்சி உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

News March 18, 2025

கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

image

 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வழங்கப்படும் அரசு நலத்திட்டங்களை மாவட்ட அளவில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தெருமுனை நாடகங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

error: Content is protected !!