News March 27, 2024

கிருஷ்ணகிரி: தலைவிரித்தாடும் சைபர் மோசடி

image

கிருஷ்ணகிரி, சூளகிரி அருகேயுள்ள மேலுமலையைச் சேர்ந்தவர் கவிசந்துரு(27), தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம், இவரது செல்போனுக்கு குறைந்த பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மர்மநபர்கள் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். இதை நம்பிய கவிசந்துரு அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக ₹19,30,860-ஐ அனுப்பி ஏமாந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 18, 2025

இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 17, 2025

காவல்துறை சார்பில் இன்று இரவு நேர ரோந்து பணி

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 17.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது

News April 17, 2025

இரட்டை கருவறை கொண்ட அதிசய கோயில்

image

பெரும்பாலும் கோயில்களில் ஒரேயொரு மூலவர் மட்டுமே காணப்படும் நிலையில், இரண்டு மூலவர் கொண்ட கோயிலாக கிருஷ்ணகிரி அத்திமுகம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இதில் காமாட்சி உடனுறை ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அகிலாண்டேஸ்வரி உடனுறை அழகேசுவரர் மற்றொரு கருவறையிலும் காட்சி தருகிறார்கள். எங்கும் இல்லாத இரட்டை கருவறை கோயில் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!