News March 29, 2024

கிருஷ்ணகிரி அருகே குவிந்த மக்கள்  

image

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சி அடிவிசாமிபுரத்தை சேர்ந்த மலை மீது மதனகிரி முனீஸ்வரா சாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இதில் கணபதி பூஜை, வாஸ்து ஹோமம் கலசஸ்தாபனம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தபட்டு நேற்று பல இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Similar News

News April 14, 2025

திடீர் மின் தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 14, 2025

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஒருவர் போக்சோவில் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகராட்சியில் உள்ள கடை ஒன்றில் நேற்று சாக்லேட் வாங்க வந்த 8 வயது சிறுமிக்கு கடைக்காரர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஒசூா் அனைத்து மகளிா் போலீசார் வழக்குப் பதிவு செய்து மளிகை கடை உரிமையாளா் சிவசங்கா் (56) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 13, 2025

இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!