News April 18, 2025
கிருமி நாசினி குடித்து முதியவர் தற்கொலை

வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் மோகன்(70) என்பவர் உடல்நலக் குறைவால் கடந்த மார்ச்.24ம் தேதி கிருமிநாசினி குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(ஏப்.16) மாலை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரம் கோட்ட அளவில், ஏப்ரல் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22.04.2025 அன்று காலை 11 மணியளவில், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து விவசாய பிரதி நிதிகளும் தவறாது கலந்துகொள்ளலாம்.
News April 19, 2025
ஆண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்

ஆண் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது பொன்மகன் சேமிப்புத் திட்டம். இதை குறைந்தபட்சம் ₹100 முதலீட்டில் தபால் நிலையங்களில் தொடங்கலாம். இதில் வருடாந்திர வைப்பு தொகையாக குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். தற்போது 9.7% வட்டி வழங்கப்படுகிறது. 15 வருட முதிர்வு காலம் கொண்டது. இதற்கு வருமான வரி சலுகை உண்டு. ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
விழுப்புரத்தில் அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

மாநில மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 640 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<