News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 8, 2025
6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை – இபிஎஸ்

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப் பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று விருதுநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் பேசிய இபிஎஸ் தி.மு.க., ஆட்சியில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 20 நாட்களில் 11 பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக தெரிவித்தார்.
News August 8, 2025
தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அவகாசம் நீட்டிப்பு

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு வரும் ஆக.31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் மாத உதவித்தொகை ரூ.750, சீருடை, காலணி, பஸ் பாஸ் உள்ளிட்ட 10 வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது.
News August 8, 2025
இருக்கன்குடி கோவில் திருவிழா கொடியேற்றம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா இன்று ஆக.8 கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் கோவில் அறங்காவலர்கள் குழுத்தலைவர், செயல் அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர். பின்னர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.