News April 6, 2025
கிணற்றில் விழுந்த வாலிபர் பலி

செஞ்சி அடுத்த கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(31). திருமணம் நடந்து, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று (ஏப்.5) மதியம் 12 மணியளவில் விவசாய கிணற்றின் அருகே நடந்து சென்ற போது வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் விழுந்தார். உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 11, 2025
விழுப்புரம் மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

▶மாவட்ட ஆட்சியர் – 9444138000 ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445008160 ▶காவல்துறை கண்காணிப்பாளர்- 9498100485 ▶ வட்ட வழங்கல் அலுவலர், விழுப்புரம்- 9445000201 ▶ நகராட்சி ஆணையர், விழுப்புரம் – 04146-222206 ▶வருவாய் கோட்டாட்சியர் அலுவலர், விழுப்புரம் – 9445000424 முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
News April 11, 2025
அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு

திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். பாலியல் தொழிலாளி குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பொன்முடியின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News April 11, 2025
அதிக மாத்திரைகளை விழுங்கிய பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அதிக மாத்திரைகளை விழுங்கிய பெண் உயிரிழந்தார். செஞ்சி வட்டம் காட்டுசித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர்விழி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதிக மாத்திரைகளை விழுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.