News April 18, 2025

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

image

மேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது விவசாய நிலத்திலிருந்த 55 அடி ஆழ கிணற்றில் நேற்று காலையில் பசு மாடு ஒன்று விழுந்து விட்டது. தண்ணீரில் தத்தளித்த பசு மாட்டை மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முருகேசன், பரஞ்ஜோதி மற்றும் வீரர்கள் கிணற்றில் இறங்கி உயிருடன் மீட்டு வெளியே எடுத்தனர். பசுவை மீட்ட வீரர்களை சுற்று வட்டார மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Similar News

News April 19, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

image

விழுப்புரம் கோட்ட அளவில், ஏப்ரல் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22.04.2025 அன்று காலை 11 மணியளவில், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து விவசாய பிரதி நிதிகளும் தவறாது கலந்துகொள்ளலாம்.

News April 19, 2025

ஆண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்

image

ஆண் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது பொன்மகன் சேமிப்புத் திட்டம். இதை குறைந்தபட்சம் ₹100 முதலீட்டில் தபால் நிலையங்களில் தொடங்கலாம். இதில் வருடாந்திர வைப்பு தொகையாக குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். தற்போது 9.7% வட்டி வழங்கப்படுகிறது. 15 வருட முதிர்வு காலம் கொண்டது. இதற்கு வருமான வரி சலுகை உண்டு. ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

விழுப்புரத்தில் அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

image

மாநில மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 640 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> வரும் திங்கள்(ஏப்.21) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2 நாட்கள் மட்டும் உள்ளதால் உங்க நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!