News April 28, 2025
கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கெங்காபுரத்தை சேர்ந்தவர் மதி (17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் ராமச்சந்திரபுரத்திலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்ற மதி நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் மதியை சடலமாக மீட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 29, 2025
திருப்பத்தூரில் மாவட்ட காவல் துறை அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை வெளியிட்டுள்ளது. வாகனம் ஓட்டும் போது கைபேசியை பயன்படுத்துவது கவனத்தை சிதறடிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. இதனால் விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன. “உங்கள் உயிர் மதிப்புடையது, ஒரு மெசேஜ் அல்லது அழைப்பு உங்கள் வாழ்க்கையைவிட முக்கியமல்ல” என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
News April 28, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலிசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 28 ம்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர் இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News April 28, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 01.05.2025 அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.