News February 18, 2025
காளையார்கோவில் என பெயர் வரக் காரணம் தெரியுமா?

சுந்தரர் ஒரு முறை காளையார்கோவில் எல்லைக்குள் வந்தவுடன் கோவிலுக்கு செல்லும் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் நடக்க தயங்கிய சுந்தரர் மனம் வருந்திப் பாடினார். அப்போது சிவபெருமான் ஒரு காளையை அனுப்பி காளை கால் பதித்த இடங்களில் லிங்கம் இல்லை என அசரீரி ஒலிக்க சுந்தரர் அவ்வழியில் சென்று தரிசனம் செய்தார். காளை வழிகாட்டிய தலம் என்பதால் காளையார்கோவில் என பெயர் பெற்றது. Share It.
Similar News
News April 20, 2025
சிவகங்கை: டிரைவர் காலிப்பணியிடம் அறிவிப்பு

தமிழ்நாடு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் காலிப்பணிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கடைசி தேதி ஏப்.30. ஊதியம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. <
News April 20, 2025
சிவகங்கை : அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 185 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
News April 20, 2025
பாலியல் தொல்லை: கொத்தனார் கைது

சிவகங்கை அம்மச்சிபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி செந்தில்குமார் 45. செந்தில்குமார் கொத்தனார் வேலை பார்க்கிறார்.அண்மையில் அவர் கட்டட வேலை பார்த்த பகுதியில், அருகிலுள்ள வீட்டில் இருந்த 5-ம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செந்தில்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.