News November 5, 2024
கால அவகாசம் கோரிய இந்து அறநிலைய துறை
தமிழகத்தில் பழமையான கோவில்களில் மூலிகை தாவரங்கள் நிறைந்த நந்தவனங்களை பராமரிக்கவும், அதற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர கோரி மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
சாலை விபத்துகளில் 137 பேர் உயிரிழப்பு
மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் வரை கடந்த 6 ஆண்டுகளில் 542 விபத்துகள் நடைபெற்றுள்ளது. அதில் 137 பேர் மரணமடைந்துள்ளதாகவும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமயநல்லூர் டிஎஸ்பி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களை தடுக்க கோரி செந்தில்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லாதது விபத்துகளுக்கு காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2024
முப்படை ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
முப்படைகளிலிருந்து ஓய்வு பெற்று SPARSH மூலம் ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர், அவர்தம் விதவைகளுக்காக SPARSH OUTREACH நிகழ்ச்சியில் SPARSH ன் ராணுவ ஓய்வூதிய குறைபாடுகள் களைய பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டாளர்கள் மூலம் ராணுவ ஓய்வுதிய குறைதீர் கூட்டம் மதுரை மடீசியா ஹாலில் வரும் 22 ஆம் தேதி 9 மணியளவில் நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயனடைய ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.
News November 19, 2024
குழு அமைத்து விசாரணை நடத்த பரிந்துரை – ஆட்சியர்
மதுரை சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் தங்களுக்கு ST சாதி சான்றிதழ் வழங்க கோரி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்து காட்டு நாயக்கர் பிரிவினருக்கு ST சான்றிதழ் வழங்குவது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்த அரசுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பரிந்துரை செய்துள்ளார். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.