News February 15, 2025

கார் டயர் வெடித்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்தது. இதில் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில், திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி(60) என்ற பூ வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளபட்டியைச் சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். 

Similar News

News August 5, 2025

திண்டுக்கல் உழவர் சந்தை காய்கறி நிலவரம்

image

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்றைய (05.08.25) காய்கறி விலை நிலவரம்
▶️கத்தரிக்காய் ரூ.66-100
▶️தக்காளி ரூ.50-46 ▶️வெண்டைக்காய் ரூ.40-50
▶️புடலை ரூ. 20-50
▶️அவரைக்காய் ரூ.80-90 ▶️பச்சை மிளகாய் ரூ.60-90 ▶️முள்ளங்கி ரூ.20-26 ▶️உருளைக்கிழங்கு ரூ.40
▶️முட்டைக்கோஸ் ரூ.30
▶️கேரட் ரூ.80
▶️ பீட்ரூட் ரூ.30-60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

News August 5, 2025

திண்டுக்கல்: கிணற்றில் மூழ்கி இளைஞர் பலி

image

திண்டுக்கல்: என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா(20). செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த இவர், நண்பர்களுடன் குளிப்பதற்காக குஜிலியம்பாறை ரோடு தனியார் கல்லூரி அருகே உள்ள கிணற்றுக்கு சென்றார். நீச்சல் தெரியாததால் இடுப்பில் கயிறுக்கட்டிக்கொண்டு கிணற்றின் ஓரமாக அமர்ந்து குளித்திருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அவிழ்ந்ததில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 5, 2025

திண்டுக்கல்: தேர்வின்றி அரசு வேலை! உடனே APPLY

image

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்ப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ஆம் தேதிக்குள், https://startuptn.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!