News March 16, 2025

காரைக்குடியில் மார்ச்.18ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் மார்ச்.18ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

Similar News

News April 18, 2025

சிவகங்கை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மின் தொழில் நுட்ப வல்லுனர் (Electrical Technician) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 12-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

News April 18, 2025

சிவகங்கை: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RAIL MADDED* என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க்<<>> மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

News April 18, 2025

10 வயது சிறுமிக்கு தொந்தரவு – கொத்தனார் மீது வழக்கு

image

சிங்கம்புணரி அருகே உள்ள நடு அம்மாச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார் கொத்தனார் (45) . திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வேலை செய்யும் போது, அப்பகுதியில் உள்ள வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!