News November 24, 2024
காரைக்கால் அருகே 9 பேர் கைது

காரைக்கால் நாகப்பட்டினம் சாலையில், நிரவி அருகே உள்ள தனியார் ரெஸ்டோ பார் ஓட்டல் அறையில் இருந்து திடீரென புகை அதிக அளவில் வெளியேறியது. தீ விபத்து ஏற்பட்டு விட்டதாக சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஓட்டல் அறையில் இருந்து வெளியேறி புகையை கண்ட போலீசார், அறையில் 2 நாட்களாக கஞ்சா அடித்து மயங்கி கிடந்த 8 வாலிபர்கள், ஓட்டல் மேலாளர் உட்பட 9 பேரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News August 9, 2025
புதுவை: ரூ.1,42,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 9, 2025
புதுவை மக்களே மானியம் வேண்டுமா? இத பண்ணுங்க!

புதுச்சேரியில் ஆழ்துளை கிணறு அமைக்கவும், நீர்மூழ்கி மோட்டார் பொருத்தவும் வழங்கப்படும் மானியம் பெறுவதற்கு தற்போதுள்ள நில உச்சவரம்பு பொது விவசாயிகளுக்கு 1% ஏக்கரில் இருந்து 1 ஏக்கராகவும். அட்டவணை இன விவசாயிகளுக்கு 1 ஏக்கரில் இருந்து ½ஏக்கராகவும் குறைக்கப்படுகிறது. எனவே இத்திட்டத்தில் உழவர் உதவியகங்கள் அல்லது https://agri.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க
News August 9, 2025
புதுச்சேரியில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 9) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகார் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.