News October 1, 2024
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
ராணிப்பேட்டையில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம்
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு வருகிற நவம்பர் 23 மற்றும் 24-ம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள இஐடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 13 வயதுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சந்தோஷ் காந்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்
சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் சோளிங்கர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News November 20, 2024
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா இன்று ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோனில் சீலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். உடன் தேர்தல் வட்டாட்சியர் செல்வி. வசந்தி, ஆற்காடு வட்டாட்சியர் பாக்கியலட்சுமி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.