News April 7, 2025

காதலனை தாக்கி காதலியை கடத்தல்

image

திண்டிவனம் வட்டம் ஆசூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ், அதே பகுதியை சேர்ந்த பெண்ணை வடபழநி கோவிலில் இரு நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்தார். இதனை அறிந்த பெண் வீட்டார் இவர்களை சமாதானம் பேச வரவழைத்தனர். இவர்கள் நேற்று(ஏப்.06) மாலை காரில் தீவனூர் வந்தபோது பெண் வீட்டார் நாகராஜை தாக்கி விட்டு, பெண்ணை கடத்தி சென்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நாகராஜ் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Similar News

News April 18, 2025

சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

image

விழுப்புரத்தில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.<> இணையதளம்<<>>

News April 18, 2025

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

image

மேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது விவசாய நிலத்திலிருந்த 55 அடி ஆழ கிணற்றில் நேற்று காலையில் பசு மாடு ஒன்று விழுந்து விட்டது. தண்ணீரில் தத்தளித்த பசு மாட்டை மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முருகேசன், பரஞ்ஜோதி மற்றும் வீரர்கள் கிணற்றில் இறங்கி உயிருடன் மீட்டு வெளியே எடுத்தனர். பசுவை மீட்ட வீரர்களை சுற்று வட்டார மக்கள் வெகுவாக பாராட்டினர்.

News April 18, 2025

கிருமி நாசினி குடித்து முதியவர் தற்கொலை

image

வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் மோகன்(70) என்பவர் உடல்நலக் குறைவால் கடந்த மார்ச்.24ம் தேதி கிருமிநாசினி குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(ஏப்.16) மாலை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!