News March 25, 2025

காணியாளம்பட்டி நிறைவு விழா நாளை நடைபெறுகிறது

image

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா காணியாளம்பட்டி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட நாள் முகாம் நிறைவு விழா நாளை நடைபெறுகிறது. முகாமில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி, பொதுமக்களிடம் கூறுவர். பின், மருத்துவ முகாம், அரசுத் துறைகள் சார்பில் கண்காட்சி நடைபெறும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 10, 2025

கரூருக்கு பெருமை சேர்த்த வீரர்

image

கரூர் மாவட்ட பாரா தடகள விளையாட்டு வீரர் ஜீவானந்தம் நடந்து முடிந்த பாரா தடகள  போட்டியிலும் மற்றும் பாரா கேலோ இந்தியா போட்டியிலும் தங்கம் வென்றார். அவரை ஊக்குவிக்கும் விதமாக நேற்று சென்னையில் துணை முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்  உயரிய ஊக்கத்தொகை ரூபாய் 3 லட்சம் வழங்கினார். கரூர் தடகளத்தில் தடம் பதிக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

News April 10, 2025

கரூர்: மனைவியின் தலையில் கல்லை போட்ட கணவன்

image

புகழூரை அடுத்து தட்டாங்காடு பகுதியைச் சோ்ந்த கொத்தனார் மணி (42) மனைவி தேனம்மாள் (40) இவா்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனா். இருவரும் வருகின்றனா். இதில் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி மணி தகராறு செய்தாக வீட்டின் முன் கிடந்த கல்லை எடுத்து தேனம்மாள் தலையில் போட்டுள்ளார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்து நேற்று மணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனா்

News April 10, 2025

கரூர்: விவசாயத்திற்கும், தொழிலுக்கும் இலவச கனிமம்!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 28 நீர்நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மட்பாண்ட தொழிலுக்கும் தேவையான வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எவ்வித கட்டணமும் இன்றி வெட்டியெடுத்துச் செல்லலாம். இதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் மட்பாண்ட தொழிலாளர்கள் தங்களது அருகிலுள்ள இ-சேவை மையங்களில் தேவையான ஆவணங்களுடன் இணையதள வழியில் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!