News March 29, 2025
காஞ்சிபுரம்: ரூ.22.61 கோடி மதிப்பீட்டில் நீதிமன்றம் அடிக்கல்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் இன்று (29.03.2025) ரூ.22.61 கோடி மதிப்பீட்டில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்/நீதிபதிகள் குடியிருப்பு கட்டும் பணிக்கான அடிக்கல் கல்வெட்டினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (காஞ்சிபுரம் மாவட்ட போர்ட்ஃபோலியோ நீதிபதி) மாண்புமிகு திரு.நீதியரசர் கே.முரளிசங்கர் அவர்கள் திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உடன் இருந்தனர்
Similar News
News April 8, 2025
ரேஷன் கார்டில் மாற்றம் செய்யணுமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வரும் 12ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் கீழம்பி, உத்திரமேரூர் வட்டத்தில் நெய்யாடுபாக்கம், வாலாஜாபாத் வட்டத்தில் திருவங்கரணை திருப்பெரும்புதூர் வட்டத்தில் எறையூர் மற்றும் குன்றத்தூர் வட்டத்தில் கரசங்கால் ஆகிய கிராமங்களில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் கார்டுகளில் அனைத்து விதமான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
News April 8, 2025
ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். <
News April 8, 2025
நெசவாளர் திட்டங்களில் சுணக்கம்: அரசு அலட்சியம்

காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கான திட்டங்கள் செயல்படுத்துவதில் சுணுக்கம் ஏற்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நெசவாளர்களின் கூலி உயர்வு இல்லை. தனியார் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி விவகாரத்தில், வரையறை இல்லை. மழைக்காலத்தில் நெசவாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் பெறும் திட்டத்தில் அலைக்கழிப்பு, கழிவுத்தொகை, 200 ரூபாயாகவே பல ஆண்டுகளாக தொடர்கிறது.