News March 2, 2025
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கி, 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு பிரம்மோற்சவம், நாளை (மார்ச்.3) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை மறுதினம், சந்திரபிரபை, 5ம் தேதி யானை வாகனம், 10ம் தேதி குதிரை வாகனம் உற்சவம் உள்ளிட்டவை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News April 21, 2025
காஞ்சிபுரம்: வறுமை நிலை நீங்க வேண்டுமா…? இங்கு போங்க

பல்லவ தலைநகரான காஞ்சிபுரத்தில் உள்ள பழங்காலக் கோயில்களில் ஒன்றான யதோத்காரி பெருமாள் கோயில் கி.பி 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும். கருவறையில், தலைமை தெய்வமான யதோத்கரி, புஜங்க சயனத்தில் உள்ள பாம்பு மஞ்சத்தில் மேற்கு நோக்கி சாய்ந்துள்ளார். வறுமையில் தவிப்பவர்கள் இங்கு வந்து வேண்டினால் மாற்றங்கள் கிடைக்குமென்பது பக்தர்களின் நம்பிக்கை, வறுமை நிலை மாற நினைப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 21, 2025
காஞ்சிபுரத்தில் வாட்டி வதைக்கும் வெயில்

காஞ்சிபுரத்தில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <