News August 3, 2024

காஞ்சிபுரம் ஊரக திட்ட இயக்குநர் மாற்றம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், நேற்று (ஆகஸ்ட் 2) திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநரான ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிட மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை.

Similar News

News August 5, 2025

காஞ்சிபுரத்தில் ரயில்வே வேலை… சூப்பர் வாய்ப்பு

image

இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 30ஆம் தேதிக்கு மேல்தான் இந்த <>இணையத்தளத்தில் <<>>விண்ணப்பிக்க முடியும். சேவ் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள விஷ்ணு திருமண மண்டபம், காஞ்சிபுரம் அருகே உள்ள ARC திருமண மண்டபம், உத்திரமேரூர் அருகே உள்ள கலைஞர் நூலகம், குன்றத்தூர் அருகே உள்ள வைப்பூர் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இதில் தவறாமல் கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News August 5, 2025

காஞ்சிபுரத்தில் வெளுத்து வாங்கிய மழை…

image

மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 4) பரவலாக மழை பெய்தது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சுங்குவார்ச்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில் மழை பெய்ததா? என கமெண்டில் சொல்லுங்க

error: Content is protected !!