News May 14, 2024

காஞ்சிபுரம் : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 32ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் 32 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 81.59% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 72.12 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 88.19 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News April 19, 2025

திருமணத்தடை நீக்கும் வைகுண்ட பெருமாள்

image

குன்றத்தூர் அருகேவுள்ள மாங்காட்டில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ காமாட்சியின் திருமணத்தை காண வந்த விஷ்ணு பகவான், திருமணம் இடம் மாற்றப்பட்ட பின் இங்கேயே கோயில் கொண்டார் . இக்கோயிலின் சிறப்பம்சம் பணப்பிரச்னையால் தடை படும் திருமணங்கள் நடைபெற இக்கோயிலுக்கு வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

காஞ்சியில் நாளைய (ஏப்ரல் 20) மின்தடை விவரம்

image

ஸ்ரீபெரும்புதுார் துணைமின் நிலையம்: மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், என்.ஜி.ஓ., காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம் ரோடு, வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கான திட்டம் அல்ல

image

குன்றத்தூரில் இன்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, “விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கான திட்டம் அல்ல. குலத்தொழிலை ஊக்குவிக்கிறது. விஷ்வகர்மா திட்டம் படிப்பை விட்டு வெளியேற்றி குடும்ப தொழிலை செய்ய ஊக்குவிக்கிறது. படிப்பை விட்டு குலத்தொழிலுக்கு செல்லுமாறு மாணவர்களை வஞ்சிக்க மத்திய அரசு திட்டம் தீட்டுவதாக” கூறினார்.

error: Content is protected !!