News February 28, 2025

காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையம் அமையுமா?

image

காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையம் அமையும் என அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் பட்டு தொழிலில் வருவாய் ஈட்டியும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கைத்தறி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னையில் உள்ள ஜவுளித்துறை அதிகாரிகள் இந்த பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், ஏற்றுமதி மையம் செய்வதற்கான இடம் தேர்வு பற்றி தகவல் இல்லை என்றனர். 

Similar News

News April 21, 2025

காஞ்சிபுரத்தில் கோடைகால பயிற்சி முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 25.04.2025 முதல் 15.05.2025 வரை மொத்தம் 21 நாட்களுக்கு காலை 6.30 முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. பெயர்களை பதிவு செய்திட இளைஞர் நலன் அலுவலர் அலைபேசி எண்.7401703481 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News April 21, 2025

காஞ்சிபுரம்: வறுமை நிலை நீங்க வேண்டுமா…? இங்கு போங்க

image

பல்லவ தலைநகரான காஞ்சிபுரத்தில் உள்ள பழங்காலக் கோயில்களில் ஒன்றான யதோத்காரி பெருமாள் கோயில் கி.பி 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும். கருவறையில், தலைமை தெய்வமான யதோத்கரி, புஜங்க சயனத்தில் உள்ள பாம்பு மஞ்சத்தில் மேற்கு நோக்கி சாய்ந்துள்ளார். வறுமையில் தவிப்பவர்கள் இங்கு வந்து வேண்டினால் மாற்றங்கள் கிடைக்குமென்பது பக்தர்களின் நம்பிக்கை, வறுமை நிலை மாற நினைப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 21, 2025

காஞ்சிபுரத்தில் வாட்டி வதைக்கும் வெயில்

image

காஞ்சிபுரத்தில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!