News June 17, 2024
காஞ்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்!

காஞ்சிபுரம், சங்கரமடம் அடுத்த சாலை தெருவில் உள்ள இந்தியன் வங்கி நுழைவாயிலில், காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் டெல்லி ராணி அவரது கணவர் இன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் டெல்லிராணியை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமணையில் அனுமதித்தனர். பணியில் இருந்த பெண் காவலரை பட்டப்பகலில் வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
Similar News
News April 30, 2025
71ஆவது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று (ஏப்ரல் 30) பொறுப்பேற்று கொண்டார். மடத்தின் தற்போதைய (70ஆவது) பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காமாட்சி அம்மன் கோயில் குளத்தில் சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார். பின்னர் இளையமடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71ஆவது பிடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

அட்சய திருதியையான இன்று (ஏப்.30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். உப்பு, குங்குமம், மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், காஞ்சிபுரத்தில் உங்கள் வீட்டருகே உள்ள லட்சுமி / பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு தங்கம் வாங்குங்கள். காலை 9:30 – 10:30, மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம். அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
காஞ்சிபுரத்தில் பிறந்த பிரபலங்கள்!

காஞ்சிபுரத்தில் பிறந்த பிரபலங்கள் உங்களுக்கு தெரியுமா?
அறிஞர் C. N.அண்ணாதுரை
பாடலாசிரியர் நா.முத்துக்குமார்
நடிகை இந்திரா தேவி
நடிகை மனோசித்ரா
நடிகர் லூஸ் மோகன்
நடிகர் செந்தாமரை
இயக்குனர் கண்ணன்
பட்டியல் இன ஆர்வலர் N. சிவராஜ்
சீர்திருத்தவாதி விஜயராகவாச்சாரியார்
இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!