News April 9, 2025
கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக மே 10 மாலை 6 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்படுகிறார். மே 11ல் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும். மே 12 ல் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.தொடர்ந்து சேஷ வாகன,கருட வாகன புறப்பாடு மண்டுக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். உங்க ஊர் திருவிழா நீங்க தான் எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்தனும்.#SHAREALL
Similar News
News April 19, 2025
கடத்தப்பட்ட தொழிலதிபர் ! சினிமா பாணியில் சேஸிங் செய்து மீட்பு…

மதுரையில் இடத் தகராறு காரணமாகக் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து சுந்தரம் மீட்கப்பட்டார். பீ.பீ குளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஏப்.6 மர்மநபர்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில் இன்று மதுரை, பாண்டி கோயில் பாலம் அருகே போலீசார் விரட்டி பிடித்து 2 பேரைக் கைது செய்தனர். கடத்தல் தொடர்பாக ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது.
News April 19, 2025
லாரியில் சிக்கி 5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட இளைஞரின் உடல்

மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் 30. இவருக்கு மனைவி பிரியா 25, 2 மகள்கள் உள்ளனர். நேற்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து டூவீலரில் சென்றபோது ஆண்டிபட்டி பங்களா அருகே மதுரை நோக்கி சென்ற லாரியின் பின் சக்கரத்தில் மோதி டூவீலருடன் சிக்கி உடல் 5 கி.மீ. வரை இழுத்து செல்லப்பட்டது. லாரியில் உடல் சிக்கி இருப்பதை கண்ட சிலர் டூவீலரில் சென்று தகவல் தெரிவித்த பின்பு தான் டிரைவருக்கு தெரியவந்தது.
News April 18, 2025
மதுரை : நியோமேக்ஸின் ரூ.600 கோடி சொத்துக்கள் முடக்கம்

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது. மதுரை பொருளாதார குற்றப்பிரிவு பதிவு செய்த FIR அடிப்படையில் விசாரணையை துவங்கிய அமலாக்கத்துறை இன்று, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நியோமேக்ஸின் சொத்துக்களை முடக்கியது.சென்னை மண்டல அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் உள்ள அசையும்-அசையா சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.