News March 17, 2025
கள்ளக்குறிச்சி: மரக்கிளை முறிந்து விழுந்து பெண் பரிதாப பலி

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஜோதி(48). இவர் கடந்த 6ம் தேதி சேலம் செல்ல ஏமப்பேர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். சாலையோர புளியமரத்தின் கிளை முறிந்து அவர் மீது விழுந்தது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், கோயம்புத்துார் தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 17, 2025
இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 17, 2025
தொழில் நிறுவனங்களை அதிகப்படுத்துவதற்கான ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதிதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அதிகப்படுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க அரசுத்துறை அலுவலர்களுடன் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News March 17, 2025
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி பகுதியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. இதனை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.