News April 16, 2025
கள்ளக்குறிச்சி: புதிய விதிமுறையால் ஏமாற்றம்

கள்ளக்குறிச்சியில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 25 மண்டலங்களில் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. தற்போது புதிய விதிமுறையால் டிரைவர், கண்டெக்டர் பணிக்கு தனி, தனியாக விண்ணப்பிக்க முடியாது. இரண்டு லைசென்ஸ்களும் வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதக கூறுகின்றனர்.
Similar News
News April 18, 2025
தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில்

ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் தளமாக வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். தீராத நோயால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 18, 2025
இலவச கல்வி: எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்களுக்கு எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும். தேவையான ஆவணங்கள்: வருமானச் சான்றிதழ், இருப்பிடம் சான்றிதழ், சாதிச் சான்றிதழ். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. rte.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News April 18, 2025
கள்ளக்குறிச்சி: ரூ. 1 லட்சம் வரை அபராதம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் சட்ட முறையாக அமல்படுத்த கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இதில் தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் கட்டாயம் எனவும், இல்லை என்றால் தொழிற்சாலை விதிகள் படி ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.