News March 21, 2025
கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு இன்று விசாரணை

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் தொடர்புடைய 37 சிறார்கள், கடந்த பிப்.21 நீதிமன்றத்தில் ஆஜராகினர். பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, 2022ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 1,100 பக்க இறுதி அறிக்கை நகல், வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இதன் விசாரணை இன்று நடைபெறுகிறது.
Similar News
News March 31, 2025
இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி படுகாயம்

கள்சங்கரபுரம் பகுதியில் ஆர்.வி.என் சூப்பர் மார்க்கெட் அருகே மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அப்படியின் மீது மோதியுள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 30, 2025
யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <
News March 30, 2025
தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரியில் பணி புரியும் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக CM cellக்கு க்கு புகார் சென்றுள்ளது. தூய்மை பணியாளருக்கு ஒப்பந்த மேளாளர் ரவிச்சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு பணி புரிபவர்கள் அளித்த புகாரின் பெயரில் காவல்துரை அதிகாரிகள் ரவிச்சந்திரனிடமும், தூய்மை பணியாளர்களிடமும் விசாரணை செய்து வருகின்றது.