News April 12, 2024
கள்ளக்குறிச்சி: ஆணுறை விற்பதற்கு தடை கோரி மனு

கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் இன்று திருநங்கைகள் ஆணுறை விற்பதை தடை செய்ய மனு கொடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கூத்தாண்டவர் கோவிலில் சில திருநங்கைகள் தவறான வேலைகளில் ஆணுறைகள் விற்பதை ஏற்க முடியாத நிலையில் கூத்தாண்டவர் கோவிலில் பணிவிடை செய்து வரும் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. அதனால் கோவிலில் ஆணுறை விற்பதை தடை செய்ய மனு கொடுத்தனர்.
Similar News
News April 18, 2025
சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கள்ளக்குறிச்சியில் காலியாக உள்ள 309 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். <
News April 18, 2025
டிராக்டர் மீது மோதி கூலி தொழிலாளி மரணம்

சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலி காமராஜ். இவர் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து,என்பவருடன் மொபட்டில், வீர பயங்கரம் பிரிவு சாலை அருகே சென்ற போது, முன்னால் சென்ற டிராக்டர், திடீரென நின்றது. இதனால் பின்னால் சென்ற மொபட், எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியதில், காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து சின்னசேலம் போலீசார் வழக்கு.
News April 18, 2025
கள்ளக்குறிச்சியில் இளைஞர் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், இந்திரானா பகுதியை சேர்ந்த மால்சிங் மகன் சந்தன்சிங்,(18). இவர் கள்ளக்குறிச்சி, துருகம் சாலையில் உள்ள ஸ்டிக்கர் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு, அவர் தங்கியிருந்த வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.