News September 15, 2024

களை எடுக்க ஸ்டாலின் முடிவு?

image

திமுகவில் குறுநில மன்னர்கள் போல செயல்படும் நிர்வாகிகளை களை எடுக்க CM ஸ்டாலின் முடிவு செய்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அக்கட்சியின் பவள விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அப்போது, திமுக கட்சி நலனுக்காக சில அதிரடி முடிவுகள், அறிவிப்புகளை அவர் எடுப்பார் எனக் கூறப்படுகிறது. அப்போது மூத்த தலைவர்கள் பலரின் சுமையை குறைத்து, இளம் தலைமுறைக்கு பொறுப்புகளை அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News August 9, 2025

பெண்களுடன் சாட்டிங்… ₹9 கோடியை இழந்த முதியவர்

image

மும்பையில் காதல் சாட்டிங் மோகத்தில் 80 வயது முதியவர் ஒருவர் ₹9 கோடியை இழந்துள்ளார். இவருக்கு வாட்ஸ்ஆப்பில் பெண்கள் பெயர்களில் சிலர் அறிமுகமாகி, அவருடன் ரொமான்ஸ் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். இதில் ஏமாந்த அவர், அவர்களுக்கு 734 முறை தன் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் ₹8.7 கோடி பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார். இப்போது கைச்செலவுக்கு குடும்பத்தினரை அணுக, அவர்கள் விசாரித்தபோது உண்மை வெளிவந்துள்ளது.

News August 9, 2025

ராசி பலன்கள் (09.08.2025)

image

➤ மேஷம் – லாபம் ➤ ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – நன்மை ➤ கடகம் – பாராட்டு ➤ சிம்மம் – வெற்றி ➤ கன்னி – நலம் ➤ துலாம் – பயம் ➤ விருச்சிகம் – அச்சம் ➤ தனுசு – மறதி ➤ மகரம் – பணிவு ➤ கும்பம் – அசதி ➤ மீனம் – கவலை.

News August 9, 2025

நீதிக்கும், அறத்துக்கும் கிடைத்த வெற்றி: அன்புமணி

image

அன்புமணி தரப்பில் நாளை நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் HC-ல் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த HC, அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதுபற்றி X பக்கத்தில் கருத்து வெளியிட்ட அன்புமணி, இது நீதிக்கும், அறத்துக்கும் கிடைத்த வெற்றி. பாமக வளர்ச்சிப்பணிகள் குறித்து நாளைய பொதுக்கூட்டத்தில் முடிவெடுப்போம் என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!