News April 2, 2025
கரூர்: வெயிலில் வேலை செய்வோர் கவனத்திற்கு!

கரூரில் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக பொது சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில், வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டுமெனில் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வெடுத்து கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT!
Similar News
News April 6, 2025
கரூர் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56809 திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயில், ஏப்ரல் 08 & 11, 2025 அன்று கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய பயண நிறுத்தம் செய்யப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது. என ரயில்வே அதிகாரி அறிவித்துள்ளார்.
News April 6, 2025
கோடையை இதமாக்கும் மண் பானை குடிநீர்!

கோடை காலத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதிலிருந்து விடுபட மண்பானையில் வைக்கப்படும் நீரை அருந்தலாம். இதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுகள் ஜீரண சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர் தனபால் தெரிவித்துள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.
News April 6, 2025
கரூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ் !

ஐடி துறையில் வேலைக்காக அதிக அளவில் இளைஞர்கள் சென்னைக்கு படையெடுத்து வரும் நிலையில், தற்போது கரூரில் மினி டைட்டல் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த டைட்டில் பார்க்கின் கட்டட வரைபடம் வடிவமைப்பு முடிந்துள்ளது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்கான டெண்டர் அரசால் விரைவில் கோரப்படும்.