News April 2, 2024
கரூர்: வியாபாரியிடம் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்

கேரளாவை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி கோபால் மகன் தினேஷ் என்பவர் வைத்திருந்த ரூ. 60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைக் கண்டித்து வாழைக்காய் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Similar News
News April 7, 2025
தேனீ கடித்ததில் பனை மரத்திலிருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

கரூர் வாங்கல் வஉசி தெருவை சேர்ந்தவர் தென்னரசு (33). இவர் நேற்று சங்க கொட்டாய் முனியப்பன் கோவில் அருகே உள்ள பனைமரத்தில் ஏறி உள்ளார். அங்கு மரத்தில் மேலிருந்த .தேனீ கடித்ததில் அங்கிருந்து கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி பிரியங்கா புகாரின் பேரில் வாங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிவு.
News April 6, 2025
கரூர் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56809 திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயில், ஏப்ரல் 08 & 11, 2025 அன்று கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய பயண நிறுத்தம் செய்யப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது. என ரயில்வே அதிகாரி அறிவித்துள்ளார்.
News April 6, 2025
கோடையை இதமாக்கும் மண் பானை குடிநீர்!

கோடை காலத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதிலிருந்து விடுபட மண்பானையில் வைக்கப்படும் நீரை அருந்தலாம். இதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுகள் ஜீரண சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர் தனபால் தெரிவித்துள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.