News April 19, 2024

கரூர் தொகுதியில் பாதுகாப்புப் பணியில் 1, 839 பேர்

image

கரூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்புப் பணியில் 1, 839 பேர் ஈடுபட உள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் 824 பேரும், வெளிமாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் 100 பேரும், துணை ராணுவத்தினர் 469 பேரும், முன்னாள் படை வீரர்கள் மற்றும் ரயில்வே காவலர்கள் 446 பேரும் ஈடுபட உள்ளனர்.

Similar News

News April 23, 2025

கரூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டு அவர்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

மனைவியிடம் பழகிய நபருக்கு அரிவாள் வெட்டு!

image

குளித்தலை அருகே பொய்யாமணி புலவர் புரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (55) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ராவணன் என்பவரின் மனைவி ரம்யாவுடன் கடந்த சில வருடங்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ராவணன் செந்தில்குமாரை அரிவாளால் தலையில் வெட்டி காயம் ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து நங்கவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 22, 2025

கரூர்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!