News April 8, 2025
கரூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம்

கரூர் : குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, மன்மங்கலம், புகலூர், ஆகிய பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற ஏப்.12ஆ தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை பயன்படுத்திக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
கரூர்: வீடு புகுந்து செயின் திருடியவர்கள் கைது !

கரூர்: வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி(60) இவர் கடந்த, ஏப்.15ஆம் தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். மீண்டும் வீட்டுக்கு வந்த போது வீட்டில் இருந்த 6 அரை பவுன் செயின் திருடபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கொடுமுடியைச் சேர்ந்த கணேசன், துரை ராஜ் ஆகிய இருவரையும் நேற்று(ஏப்.14) கைது செய்தனர்.
News April 18, 2025
கரூரில் கட்டாயம் தெரிய வேண்டிய எண்கள் !

▶️மாநில கட்டுப்பாட்டு அறை: 1070
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை: 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:04324-257510
▶️காவல் கட்டுப்பாட்டு அறை: 100
▶️விபத்து உதவி எண்: 108
▶️தீ தடுப்பு, பாதுகாப்பு :101
▶️விபத்து அவசர வாகன உதவ: 102
▶️மருத்துவ உதவி எண்:104
▶️குழந்தைகள் பாதுகாப்பு: 1098
▶️பேரிடர் கால உதவி:1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி:1091
உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 18, 2025
கரூர்: ரயில் பயணிகள் கவனத்திற்கு !

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும் ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற ஆப்பை பயன்படுத்தி பயணிகள் பயன்பெறலாம்.உங்கள் புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும். பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!