News April 27, 2025
கரூரில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு!

கரூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, கரூர் மாவட்டத்தின் சில இடங்களில், பரவலாக மழைபெய்தது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
Similar News
News April 28, 2025
கரூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

கரூர்: காட்டு முன்னூர் பகுதியில் உள்ள தங்கராஜ் தோட்டம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து க.பரமத்தி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மணிவேல் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 27, 2025
கரூர்: அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அமைச்சர் பதவியை தொடர்வதில் சிக்கல் எழுந்தது. இதனால் அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்த மதுவிலக்கு, ஆயத்தீர்வத்துறை, அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
News April 27, 2025
கரூர் வட்டாட்சியர் எண்கள்

▶️வட்டாட்சியர், கரூர்: 9445000598
▶️வட்டாட்சியர், அரவக்குறிச்சி: 9445000599
▶️வட்டாட்சியர், குளித்தலை: 9445000600
▶️வட்டாட்சியர், கிருஷ்ணராயபுரம்: 9445000601
▶️வட்டாட்சியர், மண்மங்கலம்: 9445461817
▶️வட்டாட்சியர், கடவூர்: 9445461822
▶️வட்டாட்சியர், புகளூர்: 04324-270370
பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!