News April 5, 2025
கரூரில் TNPSC Group 1 தேர்வுக்கான இலவச பயிற்சி!

TNPSC Group I தேர்வுக்கான அறிவிப்பு 01.04-2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 01.04.2025 முதல் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் ,நேரடியாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04324- 223555, 9499055912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 6, 2025
கோடையை இதமாக்கும் மண் பானை குடிநீர்!

கோடை காலத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதிலிருந்து விடுபட மண்பானையில் வைக்கப்படும் நீரை அருந்தலாம். இதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுகள் ஜீரண சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர் தனபால் தெரிவித்துள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.
News April 6, 2025
கரூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ் !

ஐடி துறையில் வேலைக்காக அதிக அளவில் இளைஞர்கள் சென்னைக்கு படையெடுத்து வரும் நிலையில், தற்போது கரூரில் மினி டைட்டல் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த டைட்டில் பார்க்கின் கட்டட வரைபடம் வடிவமைப்பு முடிந்துள்ளது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்கான டெண்டர் அரசால் விரைவில் கோரப்படும்.
News April 6, 2025
கரூரில் கவிழ்ந்த கல்லூரி பஸ் ; 7 பேர் படுகாயம்

கரூர்: அரவக்குறிச்சி அருகே, வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்க், நேற்று(ஏப்.5) காலை, 38 மாணவர்களை அழைத்துச் சென்ற கல்லுாரி பஸ், அரவக்குறிச்சி அருகே, சின்ன தொப்பாரப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.