News November 19, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10 மணிக்கு மார்த்தாண்டம் களியக்காவிளை பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி CPIM குழித்துறை சந்திப்பில் ஆர்ப்பாட்டம். #மாலை 5 மணிக்கு ஊரம்பு சந்திப்பில் AAYகுடும்ப அட்டைகளை NPHH அட்டைகளாக மாற்ற வலியுறுத்தி CPIM ஆர்ப்பாட்டம். #காலை 10 மணிக்கு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

Similar News

News November 19, 2024

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்: 18 கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 14 மற்றும் 14.86 அடி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 42.24 அடி நீரும்,77அடி நீரும், 77 அடி கொண்ட பெருஞ்சாணியில் 64.68 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்டல் அணையில் 25 அடி நீரும், 42.65அடி 42.65 அடி கொண்ட பொய்கையில் 15.1 அடி நீரும் இருப்பு உள்ளது.

News November 19, 2024

‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் 113 பெண் போலீசார் நியமனம்

image

போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் பெண் போலீசார் அந்த பகுதி கல்வி நிறுவங்களுடன் தொடர்பு அலுவலராக இருப்பார். இவர்கள் மாணவிகளுடன் தோழியைப்போல பழகுவர். வீட்டில், பள்ளியில் பகிர்ந்துகொள்ள இயலாத பிரச்னைகளை இவர்களிடம் தெரிவித்தால் தீர்வு காண்பர். நம் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் 113 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று(நவ.,18) நாகர்கோவிலில் நடந்த விழாவில் SP சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

குமரி: 74 பேர் கைது! 127 டன் அரிசி பறிமுதல்

image

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்து குமரி வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு நெல்லை சரக டி.எஸ்.பி. மேற்பார்வையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை போலீசாரின் சோதனையில் 127 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் நேற்று கூறினர்.