News April 12, 2025
கனிமங்கள் எடுத்து செல்ல ஆன்லைன் மூலம் அனுமதிச் சீட்டு

சென்னை மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணியில் கிடைக்கப்பெறும் மண், சக்கை கல் உள்ளிட்ட கனிமங்களை அப்புறப்படுத்துவதற்கு வரும் 28-ந் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சீட்டுகள் மூலம் கனிமங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது என சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 13, 2025
திருமா பயிலகத்தில் கட்டணமில்லா பயிற்சி

குரூப் தேர்வுகளுக்கு திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 27ம் தேதி முதல் நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு டிஎன்பிஎஸ்சி மற்றும் எஸ்.ஐ. தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. மேலும், பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், அலைபேசி (8610392275), மின்னஞ்சல் (thirumapayilagam@gmail.com) ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
News April 13, 2025
பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
News April 13, 2025
கிரேனில் இருந்து மரம் விழுந்து தொழிலாளி பலி

புழல் கதிர்வேடு பகுதியில், குஜராத்தை சேர்ந்த சஞ்சித் என்பவருக்கு சொந்தமான மர கிடங்கு உள்ளது.கதிர்வேடு விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் ராஜேஷ் என்கிற ஜான், 33.நேற்று மதியம், லாரியில் இருந்து கிரேன் வாயிலாக மரங்களை இறக்கும் போது திடீரென கிரேனில் இருந்த மரம் ஜான் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் தலை நசுங்கி பலியானார்.புழல் போலீசார் உடலை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.