News April 19, 2025
கத்தியை காட்டி வழிப்பறி: மூன்று சிறுவர்கள் கைது

தேனி, பெரியகுளத்தை சேர்ந்தவர் குணசீலன் 27. தேனியிலிருந்து பைபாஸ் ரோட்டில் டூவீலரில் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது குணசீலனை கத்தியை காட்டி 3 பேர் பணம் கேட்டு மிரட்டினர். குணசீலன் தன்னிடம் பணம் இல்லை என்றார். மூவரும் அவரது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை வழிப்பறி செய்து தப்பினர்.போலீசார் வடுகபட்டியைச் சேர்ந்த 17 வயது 3 சிறுவர்களை கைது செய்து அலைபேசியை கைப்பற்றினார்.
Similar News
News April 19, 2025
காணொலி காட்சி மூலம் பார்வையிட்ட ஆட்சியர்

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (19.04.2025) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வினை, காணொளிக்காட்சி வாயிலாக, தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் மற்றும் கைவினைஞர்கள் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.
News April 19, 2025
தேனி மாவட்டத்தில் 106 சத்துணவு உதவியாளர் காலி பணியிடங்கள்

தேனி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 106 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு 26.04.2025 கடைசி நாள் ஆகும்.
News April 19, 2025
வெயிலில் இருந்து கறவை மாடுகளை பாதுகாக்க ஆலோசனை

தேனி மாவட்டத்தில் கறவை மாடுகள் வளர்ப்பு அதிகம் காணப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கறவை மாடுகள் மற்றும் காளைகளை வெயிலில் கட்டி வைக்கக்கூடாது. உலர்ந்த தீவனங்கள், குச்சி புண்ணாக்கு, தாது உப்புக்கள் ஆகியவை தேவையான அளவில் உணவாக தர வேண்டும். குளிர்ச்சியான இடத்தில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டும் என கால்நடை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.