News March 26, 2025
கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

ஓசூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த கொலை வழக்கில் உனிசெட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை அவரது மனைவி ரூபா மற்றும் கள்ளக்காதலன் தங்கமணி ஆகியோர் கொலை செய்த வழக்கில் இருவருக்கும் நீதிபதி சந்தோஷ் ஆயுள் தண்டனையும் தலா நான்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து இருவரையும் தேன்கனிக்கோட்டை போலீசார் கோவை மற்றும் சேலம் சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 29, 2025
கிருஷ்ணகிரியில் சனி தோஷம் நீக்கும் அற்புத தலம்

கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் தீர்த்தகுள காசி சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இன்று சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதால் இங்கு உள்ள சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம சனி நடைபெறுவர்கள் அதன் தாக்கத்தில் இருந்து விடுப்பட்டு வாழ்க்கை வளமாகும். ஷேர் பண்ணுங்க
News March 29, 2025
மத்திய அரசில் வேலை வாய்ப்பு

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர், இளநிலை சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி 10th ,12th தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் , விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 24குள் இந்த லிங்கை <
News March 28, 2025
இரண்டு மூலவர் கொண்ட சிவன் கோயில்

கிருஷ்ணகிரியில் புகப்பெற்ற சிவன் கோயில்களில் ஐராவதேஸ்வரர் கோயிலும் ஒன்று. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். ஆனால் இங்கு இரண்டு மூலவரை நாம் தரிசிக்க வேண்டும். ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள் பாலிக்கிறார்கள். மேலும் சூரியனின் பூஜைக்காக நந்தி மூலவரை காட்டிலும் சற்று விலகி இருக்கும் தலமாகும். ஷேர் பண்ணுங்க