News November 11, 2024
கடலோர பாதுகாப்பு பணியில் சேர விண்ணப்பிக்கலாம்
இந்திய கடலோர பாதுகாப்பு படையில் சேர விருப்பமுள்ள விழுப்புரம் கடலூர் மாவட்ட மீனவ சமுதாய சேர்ந்த இளைஞர்கள், கடலூர் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி பிளஸ் டூ தேர்வில் 50% மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய நபர்களுக்கு 3 மாத இலவச பயிற்சி வழங்கப்படும் என கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2024
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் எல்லிஸ் சத்திரம் சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசு அலுவலர்களின் வாகனம் நிறுத்துவதற்கான இடம் சீர் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனிஇன்று (19.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உட்பட பலர் உள்ளனர்.
News November 19, 2024
மாவட்ட காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர் நியமனம்
கடலூர் தெற்கு மாவட்டத்தில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பி.பி. கே சித்தார்த்தன் அவர்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளராக மாநில தலைவர் செல்வப் பெருந்தகையால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு அவரின் பணி சிறக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் வாழ்த்தி வணங்கினார்கள்.
News November 19, 2024
விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் இன்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், ஹரிகிருஷ்ணன், எஸ்.வேல்மாறன், ஏ.நாகராஜன், ஆர்.தாண்டவராயன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.