News April 7, 2025
கடலூர்: முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

முன்னாள் படைவீரர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. அதனால் தொழில்களில் பயிற்சி பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் உடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரம் பெற கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ 04142-220732 தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2025
கடலூர்: மதுபான கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

மகாவீர் ஜெயந்தி தினமான ஏப்.,10ஆம் தேதி அன்று கடலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களை மூட வேண்டும். இதை மீறி திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
News April 7, 2025
கடலூர்: ரூ.15,000 மாத சம்பளத்தில் வேலை

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி (Business Development Executive) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இங்கே<
News April 7, 2025
கடலூரில் வேல் கோட்டம் உள்ள கோயில் எது தெரியுமா?

கடலூர் புதுவண்டிபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமாகும். இங்கு “வேல் கோட்டம்” தனியே அமைந்துள்ளது. இதற்கு ஞாயிறு, கிருத்திகை, பூச நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இந்த வேலை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு எல்லாவித பலன்களும், தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.