News April 6, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி அப்பரண்டீஸ் ஷிப் சேர்க்கை முகாம், கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் வரும் 15ஆம் தேதி நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனரை நேரிலையோ, அல்லது 9499055861 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 9, 2025

விருதை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொத்தனார் மீது வழக்கு

image

விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம் மகன் விக்னேஷ் (வயது 32). கொத்தனார். இவரது வீடு அமைந்துள்ள பகுதிக்கு சென்ற கடலூர் சிறுமிக்கு விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் தாய் இது தொடர்பாக கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விக்னேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 9, 2025

கடலூர்: புலனாய்வு துறையில் வேலை; நாளை கடைசி நாள்

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க !

News August 9, 2025

கடலூர்: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு !

image

கடலூர் மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 1757 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!