News March 23, 2024
கடலூர் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

கடலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், கடலூர் உழவர் சந்தை அருகே இன்று ஆட்டோ டிரைவரிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ஆட்டோக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், தாறுமாறாக நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அப்போது ஆட்டோ டிரைவர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News April 30, 2025
அட்சய திருதியை: செல்வம் பெருக இந்த கோயிலுக்கு போங்க

கடலூர், இன்று அட்சயதிருதியை முன்னிட்டு செல்வம் பெருக வழிபட வேண்டிய கோயில்கள்: 1.சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள மகாலட்சுமி, 2.திருவந்திபுரம் பெருமாள் கோயிலில் உள்ள வைகுண்ட நாயகி, 3.சேந்திரக்கிள்ளை லட்சுமி குபேரர், 4.குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் உள்ள செங்கமல வல்லி தாயார், 5.பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள். நேரம் கிடைத்தால் சென்று வாருங்கள். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
News April 30, 2025
கடலூரில் மதுபான கடைகளை மூட வேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு

தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி ஒரு நாள் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து FL-1 மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மதுபானக்கூடங்கள், FL-2 / FL-3 உரிமம் பெற்று இயங்கும் மனமகிழ் மன்றங்களை மூட வேண்டும். அதை மீறி கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
கடலூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினம் (1.05.2025) அன்று காலை 11 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி பொது நிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.